உலக கை கழுவுதல்
தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.
எமது கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தைப்
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச தினமாகும்.
நமது கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுவதன் மூலம் எனக்கு ஏற்படும் நோய்களே தடுத்து உயிரினை பார்க்க முடியும் என்பதனை நினைவூட்டுவதாக இந்நாள் விளங்குகிறது. உலகளாவிய ரீதியில் கை
கழுவுதல் தினத்தின் முதன்மை நோக்கம் உலகெங்கும் உள்ள மக்களிடையே கை
கழுவும் பழக்கத்தினை பின்பற்ற ஊக்குவிப்பதாகும்.
மேலும் உலகளாவிய சுகாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்காக
கொண்டதே இந்நாள்.
உலக கை கழுவுதல் தினம் |
உலக கை கழுவுதல்
தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
நோய் பரவாமல் தடுக்க
கை கழுவுதல் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். இருப்பினும் இது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அல்லது தொடும் பொருட்களில் கிருமிகள் பற்றி இரியாக்கள் மற்றும் வைரஸ்கள் ஒவ்வொரு நாளும் செழித்து
வளர்கின்றன. எனவே இவ்வாறான பொருட்களை
தொட்ட பிறகு நாம் கைகளை கழுவுவதில்லை.
இவ்வாறு கைகளை கழுவாமையினால் இந்த நோய் கிருமிகள்
எளிதில் நம் உடலுக்கு பரவி பல
நோய்களுக்கு வழிவகுக்கும். இது உலக அளவில்
குழந்தைகள் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உலக
சுகாதார அமைப்பின் கூற்றுப்படி நாம் கை கழுவும்
பழக்கத்தினை கொண்டிருப்போமாயின் சுவாசத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களின் பரவலை குறைக்கும் என கூறியுள்ளனர்.
அண்மை காலங்களில் உலகை பெரிய நெருக்கடிக்குள்
தள்ளிய கோவில் 19 தொற்று நோயானது
அதிகளவாகவும் விரைவாகவும் மக்களுக்கு பரவுவதற்கு காரணம் எமது கைகள் ஆகும்.
ஆம் நாம் கைகளை கழுவாமையினால்
கோவிட் 19 வைரஸ் ஆனது எமது கைகளின்
மூலம் உடலுக்கு சென்று நோயினை உருவாக்கியது. இதன் காரணத்தினால் தான்
அரசாங்கங்கள், நிறுவனங்கள் பாடசாலைகள், மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்து கைகளை கழுவிய பின்னரே உட்பிறவேசிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கை கழுவுதல் தினத்தின் பின்னால் உள்ள அறிவியல்.
சவர்க்காரத்தை பயன்படுத்தி கைகளை கழுவுவதன் மூலம் சவர்க்காரமானது
கிருமிகளை எமது கைகளில் சிக்க
வைக்கும் எண்ணெய் மற்றும் கிரீசை நீக்குகிறது. இதன் மூலம் எமது
கைகளில் கிருமிகள் தங்குவது குறைவடைகின்றது. மேலும் சவர்க்காரமிட்டு கைகளை நாம் கழுவும் போது சவர்க்காரம்
அழுக்குகள் மற்றும் அசுத்தங்களை நீக்குகின்றது. எனவே
நாம் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை கைகளை
கழுவ வேண்டும். நாம் கைகளை கழுவும்
போது விரல்களுக்கு இடையில் நகங்களுக்கு கீழ் மற்றும் கைகளின்
பின்புறம் உட்பக்க கைகளில் அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.
நாம் கைகளை எப்போது
கழுவ வேண்டும்.
- உணவு தயாரிப்பதற்கு முன்னும் பின்னும்.
- கழிப்பறையை பயன்படுத்திய பிறகு
- இருமல், தும்மலின் பிறகு.
- குப்பபைகளை கைகளால் அல்லுதல் மற்றும் பிராணிகளை தொட்ட பிறகு.
இவ்வாறு நீங்கள் உங்களது கைகளை கழுவும் போது நோய் தொற்றுகள் பரவும்
அபாயத்தை கணிசமாக குறைக்க முடியும்.
உலகில் உள்ள அனைவராலும் கை கழுவும் தினம் கொண்டாடப்படுகின்றதா?
கை கழுவுவதினால் எமக்கு
பல நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் உலகெங்கிலும் உள்ள பலருக்கு இன்னும்
அடிப்படை கைகளிலும் வசதிகள் கிடைப்பதில்லை. உலக மக்கள் தொகையில் சுமார் 40% மக்களுக்கு
வீட்டில் சோப்பு மற்றும் தண்ணீருடன் கை
கழுவும் வசதிகள்
இல்லை. குறைந்த
பொருளாதாரத்தினை கொண்ட நாடுகளில் இது மிகவும் சிக்கலானதாக
காணப்படுகின்றது. அவ்வாறான நாடுகளில் சிறந்த சுகாதார வசதிகள் காணப்படுவதும் சிக்கலானதாகும்.
நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று கைகளை கழுவுவதாகும். உலகளாவிய கை கழுவுதல் தினம் ஒரு அத்தியாவசிய தினமாகும். சவர்காரத்துடன் கை கழுவுவதை ஊக்குவிப்பதன் மூலமும், அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், ஆரோக்கியமான, பாதுகாப்பான உலகிற்கு நாம் அனைவரும் பங்களிக்க முடியும்.
உங்களுடைய ஆரோக்கியம் உங்கள் கைகளில்!
உலக கைகழுவுதல் தினம்.
15th of October
சர்வதேச
கை கழுவுதல் தினம்!
முறையான
கைகளை கழுவி தொற்று நீக்குவோம்.
எப்பொழுதெல்லாம்
?????
1.உணவு
உண்ண முன்
2.உணவு
உட்கொண்ட பின்
3.விலங்குகளை/
பிராணிகளை தொட்ட பின்
4.
மலசலக்கூம் செல்ல முன்/ சென்று வந்த பின்
5.நோயாளர்களை
பார்க்க செல்லும் முன், பின்
6.உணவு
சமைக்க முன், பின்
கை
கழுவுவதை பழக்கமாக வைத்திருங்கள்.
கை
கழுவும் தினம்!
உலகில்
ஆரோக்கியமான மனிதனே மிகப்பெரிய செல்வந்தன்.
இன்று உலக
கை கழுவும் தினம்.
சுத்தமான
கைகள்’ சுகாதாரமான வாழ்வு
Happy global handwashing day
October 15
“இன்று உலக கை கழுவுதல்
தினம்”
இவ் சில நிமிடங்கள்
உங்களினதும் உன் வாழ்வை பல வருடங்கள் வாழ வைக்கும்.
கை கழுவுங்கள்
சுத்தமான கைகள்,
உங்களினதும் பிறரினதும் எதிர்காலத்தின் உத்தரவாதம்.
INTERNATIONAL HANDWASHING DAY
GLOBAL HANDWASHING DAY
சுத்தமான கைகள்
நோயற்ற வாழ்வு
ஆரோக்கியமான எதிர் காலம்.
15th October
GLOBAL HANDWASHING DAY
சராசரியாக, தினந்தோறும் நாம் 300 மேற்பட்ட மேற்பரப்புக்களை கையாள்கின்றோம், அண்ணளவாக
இவற்றில் 840,00 கிருமிகள் வாழ்கின்றன.
கைகளை முறையாக கழுவி தொற்று நீக்குங்கள்.
எமது எதிர் காலம்
எமது கைகளில்
சர்வதேச கைகழுவுதல் தினம் இன்று
15th October
Post a Comment